Home Events 2nd WOW (Women of Wisdom)

Events

27-11-2020 12:00 am - 12:00 pm | Venue: Online Virtual Programs, Your Home, on the Road, or wherever there's an internet connection

2nd WOW (Women of Wisdom)

அன்புடையீர்

வணக்கம்!!

TEF TEAM2020 thanks you all for the overwhelming response to the 11th TICE & 4th EEA ceremony. We thank you all for the participation by listening to the Guests, Speakers and for visiting the Sponsors and Exhibitors.

Our Next event is the 2nd WOW (Women of Wisdom), another quality program in 3 essential topics for the benefit and awareness of Women and Girls, scheduled for 27-Nov-2020 Friday from 9.30 AM to 12.00 Noon (kindly refer event flyer for details)

Zoom Direct Link: https://us02web.zoom.us/j/86923669166?pwd=TW94TzdneW0xZlZsZjhJVGZzWEhsUT09

ZOOM ID: 869 2366 9166
Passcode: 27112020

நேற்றைய நிகழ்ச்சியில் பங்குபெற்ற உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள். நீங்கள் மனதாரத் தந்த பாராட்டுக்கள்  ஓரிரு வார்த்தைகளோ, வரிகளோ எனினும் கூட, அவை தந்த ஊக்கம் அளப்பரிய உற்சாகத்தை TEF 2020  குழும நண்பர்களுக்கு அளித்து உள்ளது. மிக்க நன்றி.

அடுத்து, நமது குழுமத்தின் பெண்கள், பெண் குழந்தைகளின் நலனுக்காகவும், விழிப்புணர்வுக்காகவும் மிக மிக அவசியமான மூன்று தலைப்புகளில் மற்றுமொரு ஒரு தரமான நிகழ்ச்சியைச் தர இருக்கிறோம்

TEF குழுமத்தின்  ஒவ்வொரு பொறியாளரின் பின்புலத்திலும் , அவரது இல்லத்திலும் அளவற்ற ஆற்றலும் நிகரற்ற திறனும் கொண்ட ஒரு  இல்லத்தரசி இருக்கிறார். இல்லத்தின் அரசியாக மட்டும் இருக்கும் அவரை தொழிலதிபர் எனும் பல்லக்கில் ஏற்றி, அழகு பார்த்து பெருமை கொள்ள இருக்கிறோம். இன்று நாம் விதைக்கும் விதை, நாளை ,ஒரு பெண் தொழிற் புரட்சிக்கான  காடாகக் கூட மலரலாம். பெரிதினும் பெரிது செய்ய சிறு அடி வைக்க, உங்களை  அழைக்கிறோம்.

அடுத்து, பெண்களின் பாதுகாப்பு, தற்காப்பு குறித்த நிகழ்ச்சி, சென்ற wow 1ல் நடைபெற்று, பெரிதும் பாராட்டப்பட்டது நாம் அறிந்ததே.

இந்த முறை அதன் அடுத்த பரிமாணமாக குடும்பத்திலும், சமூகத்திலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவற்றை எதிர்கொள்ள சட்டரீதியான வழிகள்,  பெண்களுக்கு சாதகமான சட்ட நுணுக்கங்கள் எவை, பெண்களும் குழந்தைகளும் அச்சுறுத்தும் சூழ்நிலைகளை எப்படி கையாளுவது போன்ற அறிவார்ந்த, அடிப்படைத்தேவையான ஒரு கலந்துரையாடல்.

அடுத்து நம் வீட்டுப் பெண் குழந்தைகள் அனைத்து துறையிலும் பிரகாசித்துக் கொண்டு வரும் வேளையில்  நாம் எவ்வளவோ படித்தும், மிக பெரிய பதவியில் இருந்தாலும், முற்போக்காக சிந்தித்தாலும்,  நம்முடைய பெண் குழந்தைகளின்  இராணுவக் கனவை பலர்  ஊக்குவிப்பதில்லை.,  நாட்டுக்கு பணி செய்யும் வேலையை இன்னும் நாம் ஒரு விதமான தயக்கத்தோடு தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். போர் முனையில் நின்று வீர சண்டையிட வேண்டும் என்ற அவசியம் இல்லாத ஆனால், அதனினும் பல  மதிப்புமிக்க வருமானம் மிக்க பதவிகள் இருந்தும் அந்த துறையை தேர்ந்தெடுக்க  பெண்குழந்தைகள் தயங்குவது ஏன்? அந்த மன நிலையை மாற்றி வரும் சந்ததிகளாவது இந்த உயர் பதவிகளில் சேர்ந்து நாட்டுக்கு பணி செய்யும் வழி முறைகளை பற்றி எளிதாக விளக்கும் ஒரு நிகழ்ச்சி.

உங்கள் வீட்டுப் பெண்கள் , குழந்தைகள், எங்கே இருப்பினும், எங்கே படித்துக் கொண்டிருந்தாலும் , எங்கே வேலை செய்து கொண்டிருந்தாலும்  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அறிவுறுத்துங்கள். தன் வீட்டுப்பெண்ணை சக தோழியாக மதிக்கும் நமது பொறியாளர்கள் நிச்சயம் பங்களிப்பீர் என்பதில் ஐயமில்லை. கைபிடித்த மகளிரின் திறமையையும் ஆளுமையையும்  கைதட்டி ஊக்கப்படுத்த நமக்குக்கிடைத்த நல்வாய்ப்பு. கைகொள்வீர், நன்றி.

அன்புடன்,

TEAM2020


Download Attachment