Home Events Valedictory Function - 2017

Events

29-12-2017 12:00 am - 10:00 pm | Venue: American International School, Hawali

Valedictory Function - 2017

 

அன்பார்ந்த குழும உறுப்பினர்களே!

வணக்கம்!

இந்த மின்னஞ்சல் மூலம் மீண்டும் உங்களைத் தொடர்பு கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. தாங்கள் குழுமத்திற்கு அளித்து வரும் ஒத்துழைப்பும் பங்களிப்பும் அளப்பறியது. உங்கள் அனைவரின் ஈடுபாடே எங்களை உத்வேகத்துடன் உந்திச் செல்ல உதவும் எரிபொருள். உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றிகள்,

வருடத்தின் இறுதி வாரத்தில் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வைக்கும் மகத்தான அனுபவத்திற்கு உங்களனைவரையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். ஆம்! மன்னர்களின் காலத்திற்குள் ஒரு மாலை நேரப் பயணம்.

1900களில் எண்ணற்ற வாசகர்களின் இதயத்துடிப்பை அதிகரித்து மகிழ்வில் ஆழ்த்திய அமரர் கல்கி அவர்களின் வரலாற்றுக் காவியமான சிவகாமியின் சபதம் என்ற நாவல் ஒரு நாட்டிய நாடகமாகக் குவைத் மண்ணில் அரங்கேற உள்ளது. தமிழகத்தின் புகழ் பெற்ற மதுரை முரளீதரன் அவர்களின் இயக்கத்தில் நமது குவைத் வாழ் தமிழ் கலைஞர்கள் உள்ளிட்ட 70 கலைஞர்கள் பங்கேற்கவுள்ள இந்த நாட்டிய நாடகம் நிச்சயம் உங்களின் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும்.

நாள்

வெள்ளிக்கிழமை, 29, டிசம்பர்,2017

நேரம்

பதிவு:  மாலை 5:00 மணி முதல்  5:30 மணி வரை

நிகழ்வு : 5:30 மணி முதல்

இடம்

அமெரிக்கன் இண்ட்டர்நேஷனல் ஸ்கூல்

 

ü  பதிவு செய்யப்படாத இருக்கைகள் விருந்தினர்களுக்கு அளிக்கப்படும் என்பதால் குழும உறுப்பினர்கள் அனைவரையும் தங்களது வருகையை மேலே உள்ள “CLICK HERE” இணைப்பின் வாயிலாக உடனடியாக பதிவு செய்யுமாறுக் கேட்டுக்கொள்கிறோம்.

ü  குழும உறுப்பினர்களுக்கான அனுமதிச் சீட்டுகள் மற்றவர்களுக்கு பகிரத்தக்கவை அல்ல.

ü  உறுப்பினர்களுக்கான முன்பதிவு 25 டிசம்பர்,2017 மாலை வரையே செய்ய இயலும்.

ü  விருந்தினர்களுக்கான நுழைவுச் சீட்டுகள் நமது நிர்வாகக் குழு உறுப்பினர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அன்புடன்

அமுதன்

த.பொ.குழுமம்

.பொ.குழுமஉறுப்பினர் என்பதில் பெருமை கொள்வோம்

 

 

Dear Members of the Fraternity

We are overwhelmed by your support & contributions to the success of all our programs. The unstinted cooperation is a source of inspiration & encouragement to us, our sincere thanks to one and all of you.

This time again, we are glad to drive you through a totally different experience. The historical Novel that created history, the one that was the heartthrob of the 1900s, Amarar Kakli’s “Sivagamiyim Sabadam” will be staged as a dance drama by the most eminent dancers Madurai Muralidharan and troupe of 70 members.

Join us during a weekend to flip pages of our history… for an evening walk through the 7th century Pallava Empire, to an endless journey with palaces of the era. We invite you all to join the expedition, a dance musical extravaganza.

Date:

Friday the 29th December 2017

Time:

Registration: 5.00 pm to 5.30 pm

Event start: 5.30 pm

Venue:          

American International School

 

Please register for the event using the above “CLICK HERE” link as vacant seats would be given away for guests, registration will be open until the evening of 25-12-2017.

Please note that Member tickers are not transferable

Guest Tickets are available with committee members, will be issued on first come first basis, rush your requirements as a huge demand and pre-bookings have commenced.

Anbudan

Amuthan

Team TEF

Be proud to be a TEFian